×

கவலைகள் நீக்கும் ‘தை’ மாத முக்கிய விரதங்கள்..!!

புராணங்களில் புண்ணியமாக கருதப்படும், தை மாதத்தின் முதல் நாள், சூரிய பகவான் தேர்ப்பாதை வடதிசையில் மாறி வரும் உத்தராயண காலம் தொடங்கும். இம்மாதம் பல புண்ணிய தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த மாதத்தில் தான் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி ஆகியவையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி போன்ற வழிபாடுகளும் செய்யப்படும். தைமாதத்தில் இருக்க வேண்டிய விரதம், அப்படி இருப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு காணலாம்.

தை கிருத்திகை விரதம்!

தையில் உள்ள கிருத்திகையில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் திருமண தடை நீங்குமாம். இந்த விரதத்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கந்தவேலை தை கிருத்திகையில் விரதமிருந்து வேண்டினால் கவலைகள், பிரச்சனைகள் தீர்ந்து வளமான வாழ்க்கையை பெறலாம்.

ஏகாதசி விரதமும் தை பூசமும்!

தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதேசியில் விரதம் இருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல குணமுள்ள புத்திரர்கள் கிடைப்பார்கள். தையில் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் சிவபெருமான், முருகனை மனமுருகி வேண்டி கொள்வது நல்லது. சிதம்பரம் பொன்னம்பலத்தில் கடவுள் ஆடலரசனாக மக்களுக்கு காட்சி கொடுத்த தினமே தைப்பூசமாகவும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேல் கொடுத்த தினம் தைப்பூசமாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

தை அமாவாசை!

இந்தாண்டு தை அமாவாசை பிப்ரவரி 9ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். தை மாதத்தில் வரும் அமாவாசையும், ஆடி மாத அமாவாசையும், புரட்டாசி மாத அமாவாசையும் தான் முன்னோர் வழிபாடுக்கு ஏற்றது. இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் பாவங்கள் நீங்குவதோடு, குழந்தைபேறு, குடும்ப அமைதி உள்ளிட்டவை கிடைப்பதாகவும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.

வீரபத்ர வழிபாடு

இந்த வழிபாடு செவ்வாய்தோறும் ஒரு ஆண்டு முழுவதும் பின்பற்றப்படுகிறது. தொடர்ந்து ஒரு வருட காலம் வழிபாடு செய்ய முடியாதவர்கள், தை மாத செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழிபாட்டினை செய்யலாம். இதனால் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.

தை வெள்ளிக்கிழமை!

தை மாத வெள்ளிக்கிழமைகளில் தான் கற்பகாம்பாளுக்கு பிராகார உலா வருவார்கள். இந்தாண்டில் ரத சப்தமி பிப்ரவரி 16ம் தேதியில் வரும். தை மாதத்தில் செய்ய வேண்டிய விரதங்களை தவறாமல் செய்து அதனுடைய பலன்களை பெற்று மகிழுங்கள்.

The post கவலைகள் நீக்கும் ‘தை’ மாத முக்கிய விரதங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Puranas ,equinox ,Lord ,Surya ,
× RELATED கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?