×

மாநிலங்களுக்கான நிதியை குறைக்க பிரதமர் மோடி முயற்சி: நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தகவல்


டெல்லி: 2014-ல் பிரதமரான பிறகு மாநிலங்களுக்கான நிதியை பெருமளவு குறைக்க மோடி மறைமுகமாக முயற்சி செய்ததாகக் குற்றச்சாட்டு. அனைத்து மாநிலங்களுக்குமான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க நிதிக்குழுவுடன் பிரதமர் மோடி ரகசியமாக ஆலோசித்ததாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் யோசனையை நிதிக்குழு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிதிக்குழு உறுதியாக இருந்ததால் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், நாடாளுமன்றத்தில் நிதிக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதாக மோடிகூறியதாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் அப்போது இணை செயலாளராக இருந்த சுப்பிரமணியம், நிதிக்குழு தலைவர் ஒய்.வி.ரெட்டியுடன் பேசியதாகவும் கூறியுள்ளார். மாநிலங்களுக்கான நிதியை குறைக்க நடக்கும் முயற்சிகளை அரசு அதிகாரி ஒருவரே முதல்முறையாக ஒப்புக்கொண்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதாக பல்வேறு மாநிலங்கள் புகார் தெரிவித்துவரும் நிலையில் அரசு அதிகாரியின் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு உண்மைகளை பல கட்டங்களாக மூடி மறைத்த பிறகே பட்ஜெட் வெளியிடப்படுகிறது. இந்திய அரசின் வரவு, செலவு கணக்குகள் வெளிப்படையாக இருந்தால் அரசின் உண்மையான நிதி நிலைமை தெரிந்துவிடும். நிதிக்குழுவும் ஏற்க மறுத்ததால் வேறு வழியின்றி மாநிலங்களுக்கு 42% பங்கை அளிக்க வேண்டும் என்ற முடிவை அரசு ஏற்றது என்று பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நிதிக்குழு பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்க மறுத்ததை நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

பி.வி.ஆர். சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் பற்றி சர்வதேச செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் பதில் தரவில்லை. மத்திய வரிகளில் மாநிலங்கள் பெறும் பங்கை 32%-ல் இருந்து 42%-ஆக அதிகரிக்க வேண்டும் என டிச. 2014-ல் நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. நிதிக்குள் பரிந்துரையை மீறி மாநிலங்களுக்கான பங்கு 33% என்ற அளவிலேயே இருக்க வேண்டும் என பிரதமர், நிதியமைச்சகம் விருப்பம் என்று தெரிவித்துள்ளனர். அரசியல் சாசனப்படி நிதிக்குழு பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் புதிய நிதிக்குழுவை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும்.

மாநிலங்களுக்கான பங்கை குறைக்குமாறு அதிகாரப்பூர்வ முறையில் பிரதமர் மேற்கொண்டு முயற்சிகளையும் ஒய்.வி.ரெட்டி ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். நிதிக்குழு தலைவர் ஒய்.வி.ரெட்டி மற்றும் பிரதமருடன் நிதி ஆயோக் சி.இ.ஓ. பி.வி.சுப்ரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 3 பேர் இடையே 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் மாநிலங்களுக்கான பங்கை 3 குறைக்கும் யோசனையை பி.வி.ரெட்டியும் நிராகரித்தார்.

பிப்.2015-ல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டை வலுப்படுத்த மாநிலங்களை பலப்படுத்த வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். நிதிக்குழு உறுப்பினர்களிடையே சச்சரவுகள் நிலவுவதாகவும் அதில் இருந்து பலன்பெற முடியும் என்றாலும் அதை அரசு விரும்பவில்லை என்றும் மாநிலங்கள் வளம்பெற வேண்டும் என்பதற்காக மத்திய வரியில் 42% பங்கை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்ததாக பிரதமர் தெரிவித்தார்.

2014-2015-க்கான பட்ஜெட்டில் ரூ.21,100 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு அடுத்த நிதியாண்டில் ரூ.10,200 கோடியாக அதாவது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடும் 18.4% குறைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு 42% பங்கை வழங்கவே நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு பாதியாக குறைத்துள்ளது.

The post மாநிலங்களுக்கான நிதியை குறைக்க பிரதமர் மோடி முயற்சி: நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Subramaniam ,Chief Executive Officer ,Niti Aayog ,Delhi ,Modi ,Finance Committee ,Finance Council ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…