×

100 நாட்களை கடந்து நீடிக்கும் போர்காசா பணய கைதிகளுக்கு கத்தார், பிரான்ஸ் மருத்துவ உதவி

ரஃபா: இஸ்ரேல், ஹமாஸ் போர் தொடரும் நிலையில் ஹமாசிடம் உள்ள பணய கைதிகளுக்கு கத்தார், பிரான்ஸ் நாடுகள் மருத்துவ உதவிகளை அனுப்பி உள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி இன்றுடன் 104 நாட்களை எட்டியுள்ளது. இந்த போரில் அப்பாவி பாலஸ்தீனர்கள் 24,285 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டனர். 60,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஹமாசை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார். இந்த போர் காரணமாக செங்கடல் பகுதியில் வணிக கப்பல் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசா பகுதியில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்க கத்தார், பிரான்ஸ் நாடுகள் முயற்சி மேற்கொண்டன. அதன்படி இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எகிப்து வழியாக மருந்து பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்கப்படும். பின்னர் அவை ஹமாஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பணய கைதிகளுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்பட்ட நோய்களுக்கு 3 மாதங்களுக்கு தேவையான மருந்து பொருட்கள், வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

The post 100 நாட்களை கடந்து நீடிக்கும் போர்காசா பணய கைதிகளுக்கு கத்தார், பிரான்ஸ் மருத்துவ உதவி appeared first on Dinakaran.

Tags : Qatar ,France ,Borgaza ,Rafah ,Israel ,Hamas ,war ,Palestinians ,Borcasa ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...