×

உலகின் வலுவான நாணயம் குவைத் தினார் நம்பர் 115வது இடத்தில் ரூபாய்: 10வது இடத்தில் அமெரிக்கா டாலர்

புதுடெல்லி: உலகின் வலுவான நாணயமாக குவைத் நாட்டின் தினார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டாலர் 10வது இடத்திலும், இந்தியாவின் ரூபாய் 15வது இடத்திலும் உள்ளது. ஒரு வலுவான நாணயம் ஒரு நாட்டின் வாங்கும் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உலக அரங்கில் அதன் நம்பகத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதனால் ஒவ்வொரு நாட்டின் நாணய மதிப்பும் உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.

அதோடு அந்த நாட்டின் பொருளாதார ஆற்றலைப் பிரதிபலிக்கிறது. நாணயத்தின் வலிமை, மதிப்பு உயரும் போது, ​​அந்த நாட்டின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து முதலீடுகள் குவியத் தொடங்கும். ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள 180 நாணயங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது. சில நாணயங்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக உலகம் முழுவதும் வர்த்தகத்திற்காக அமெரிக்காவின் டாலர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் உலகின் வலிமையான 10 நாணயங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடம் குவைத் தினார் இடம் பிடித்துள்ளது. ஒரு குவைத் தினார் என்பது ரூ. 270.23 அல்லது அமெரிக்க டாலர் மதிப்பில் $3.25 ஆகும். இரண்டவாது இடத்தை பஹ்ரைன் தினார் பிடித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 220.4. அமெரிக்க டாலர் மதிப்பு $2.65 ஆகும். 3வது இடத்தை ஓமானி ரியால் பிடித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 215.84. அமெரிக்க டாலர் மதிப்பு $2.60. 4வது இடத்தை ஜோர்டானிய தினார் பிடித்துள்ளது.

அதன் மதிப்பு ரூ. 117.10. அமெரிக்க டாலரில் மதிப்பு $1.141 ஆகும். 5வது இடத்தை ஜிப்ரால்டர் பவுண்ட் (ரூ. 105.52 மற்றும் $1.27), 6 வது இடத்தை இங்கிலாந்து நாட்டின் பவுண்ட் (ரூ. 105.54 மற்றும் $1.27), 7 வது இடத்தை கேமன் ஐஸ்லாந்து டாலரும்(ரூ.99, $1.20), 8 வது இடத்தை சுவிஸ் பிராங்க் (ரூ. 97.54 மற்றும் $1.17), 9வது இடத்தை யூரோவும் (ரூ. 90.80 மற்றும் $1.09) பிடித்துள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்க டாலர் கடைசியாக உள்ளது, ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ. 83.10 ஆகும். அமெரிக்க டாலர் உலகளவில் மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் நாணயமாகவும், முதன்மை இருப்பு நாணயமாக இருந்தபோதிலும், இது உலகின் வலுவான நாணயங்களில் 10 வது இடத்தில் உள்ளது. அதே சமயம் ஒரு அமெரிக்க டாலருக்கு 82.9 ரூபாய் என பட்டியலிடப்பட்ட மதிப்புடன் இந்தியா 15வது இடத்தில் உள்ளது.

1960ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, குவைத் தினார் தொடர்ந்து உலகின் மிகவும் மதிப்புமிக்க நாணயமாக தரவரிசையில் உள்ளது. அதே போல் சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீனின் நாணயமான சுவிஸ் பிராங்க், உலகின் மிகவும் நிலையான நாணயமாக கருதப்படுகிறது என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

The post உலகின் வலுவான நாணயம் குவைத் தினார் நம்பர் 115வது இடத்தில் ரூபாய்: 10வது இடத்தில் அமெரிக்கா டாலர் appeared first on Dinakaran.

Tags : Kuwaiti ,Delhi ,Kuwait ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...