×

அதிக ஸ்மார்ட் போன் விற்று சாம்சங்கை முந்தியது ஆப்பிள்

புதுடெல்லி: சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில், அதிக போன்களை விற்பனை செய்து சாம்சங் நிறுவனத்தை முந்தி ஆப்பிள் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம்தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. பின்னர், ஷாவ்மி உள்ளிட்ட சீன போன் தயாரிப்புகள் வரவால் இந்தியா உட்பட சில நாடுகளில் பிற ஸ்மார்ட் போன்கள் விற்பனை சரிவை சந்தித்தது. இருப்பினும் சர்வதேச அளவில் சாம்சங் நிறுவனம் தனியிடம் பிடித்திருந்தது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து முதல் முறையாக 13 ஆண்டு கோலோச்சி வந்த சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி, ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச தரவு கழகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, கடந்த 2023ல் சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன்கள் விற்பனை முந்தைய ஆண்டை விட 3.2 சதவீதம் சரிந்து, 170 கோடியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஆப்பிள் நிறுவனம் 23.46 கோடி போன்களை விற்று முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக சாம்சங் நிறுவனம் 22.66 கோடி போன்களை விற்றுள்ளது. இதன்மூலம் சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில் 20.1 சதவீத இடத்தை ஆப்பிள் பிடித்துள்ளது. 2010ம் ஆண்டில், அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்கள் வரிசையில் முதல் 5 இடங்களில் ஆப்பிள் ஐபோன்கள் இடம் பெற்றிருந்தன.

The post அதிக ஸ்மார்ட் போன் விற்று சாம்சங்கை முந்தியது ஆப்பிள் appeared first on Dinakaran.

Tags : Apple ,Samsung ,New Delhi ,Xiaomi ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...