×

ஜென்னிங்ஸ் 154 ரன் விளாசல் இங்கிலாந்து லயன்ஸ் அபார ரன் குவிப்பு

அகமதாபாத்: இந்தியா ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 382 ரன் குவித்துள்ளது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இங்கிலாந்து லயன்ஸ் தொடக்க வீரர்கள் கீட்டன் ஜென்னிங்ஸ் – அலெக்ஸ் லீஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 157 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். லீஸ் 73 ரன் விளாசி வெளியேற, ஜென்னிங்ஸ் – கேப்டன் ஜோஷ் போஹன்னன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 128 ரன் சேர்த்தது.

ஜென்னிங்ஸ் 154 ரன் (188 பந்து, 20 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேம்ஸ் ரியூ 17 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 382 ரன் குவித்துள்ளது (82 ஓவர்). போஹன்னன் 93 ரன், டான் மவுஸ்லி 35 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ பந்துவீச்சில் மானவ் சுதர் 3 விக்கெட் கைப்பற்றினார். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post ஜென்னிங்ஸ் 154 ரன் விளாசல் இங்கிலாந்து லயன்ஸ் அபார ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jennings ,England Lions ,AHMEDABAD ,India A ,Modi Stadium, India A ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி