×

188 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. ஹேசல்வுட், கேப்டன் கம்மின்ஸ் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் 62.1 ஓவரில் 188 ரன் எடுத்து சுருண்டது. கிர்க் மெக்கன்ஸி அதிகபட்சமாக 50 ரன் (94 பந்து, 7 பவுண்டரி), கடைசி வீரர் ஷமார் ஜோசப் 36 ரன் (41 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 15 ஓவரில் 6 மெய்டன் உள்பட 44 ரன்னுக்கு 4 விக்கெட், கம்மின்ஸ் 17 ஓவரில் 5 மெய்டன் உள்பட 41 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினர். ஸ்டார்க், லயன் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸி. முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ஸ்மித் 12 ரன், லாபுஷேன் 10 ரன் எடுத்து ஷமார் ஜோசப் பந்துவீச்சில் வெளியேறினர். கவாஜா 30 ரன், கிரீன் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post 188 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Tags : West Indies ,Adelaide ,Australia ,Adelaide Oval, Australia ,Hazelwood ,Captain Cummins Vagap ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...