×

உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு-1 கிராமம், மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் கடந்த 15ம் தேதி அரசு பஸ் மின்கம்பத்தில் மோதியதில் மின்சாரம் பாய்ந்து பலியான ஓட்டுநர் நாகராஜ், பயணி பாலாஜி ஆகிேயாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதேபோல், அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான மதுரை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (39), சின்ன கருப்பு (31) மற்றும் சிறுவன் ஹரி (16) ஆகியோரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Nagaraj ,Cherangodu-1 village ,Malawan Cherambadi, ,Nilgiri district ,Bandalur ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...