×

வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை ரூ.2.50 குறைப்பு

 

சேலம்: நாடு முழுவதும் சிஎன்ஜி என்னும் கம்பரஸ் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் சிஎன்ஜி காஸ் நிரம்பும் பம்ப்களை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசிஎல்) அமைத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு பிரிவு சார்பில் 15 பெட்ரோல் பங்க்குகளில் சிஎன்ஜி காஸ் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பங்க்குகளில் சிஎன்ஜி காஸ் மூலம் இயங்கும் பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயற்கை எரிவாயுவை ஒரு கிலோ ரூ.82 என்ற விலையில் நிரப்பி வந்தனர். கடந்த 172 நாட்களாக சேலம் மாவட்டத்தில் சிஎன்ஜி காஸ் விலை ரூ.82 ஆக இருந்தது. இந்த விலை நேற்று திடீரென ரூ.2.50 குறைக்கப்பட்டது. இதன்மூலம் சிஎன்ஜி என்னும் கம்பரஸ் இயற்கை எரிவாயு கிலோ ரூ.79.50க்கு விற்கப்பட்டது. இதன்விலை வரும் நாட்களில் இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிஎன்ஜி காஸ் கோவையில் ரூ.80க்கும், திருப்பூரில் ரூ.77க்கும், ஈரோட்டில் ரூ.88க்கும், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ரூ.83க்கும், நாமக்கல்லில் ரூ.79.50க்கும் விற்கப்படுகிறது.

The post வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை ரூ.2.50 குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Indian Oil Company ,IOCL ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை