×

ஆளுநர் செய்வது தவறு தமிழக அரசியலில் இருந்து எடப்பாடியை நீக்குவோம்: டிடிவி.தினகரன் பேச்சு

கடலூர்: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கடலூர் மஞ்சக்குப்பத்தில் எம்ஜிஆரின் உருவ சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘எம்ஜிஆருக்கு பின் அரசியல் வாரிசாக 16 ஆண்டுகள் ஜெயலலிதா அதிமுகவை கட்டி காத்தார். எடப்பாடி பழனிச்சாமியின் தவறான நிர்வாகத்தாலும் சுயநல கும்பலாலும் அதிமுக களவாடப்பட்டுவிட்டது. களவாடி கபளீகரம் செய்யப்பட்ட அதிமுகவை மீட்டெடுக்க உருவாகியது தான் அமமுக. இரட்டை இலையை வைத்து பண ஆணவத்தால் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். எடப்பாடி எனும் தூரோக சக்தியை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து நீக்குவோம்’, என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளுவருக்கு காவி ஆடை என்ற விவகாரத்தில் ஆர்.என். ரவி செய்து இருப்பது ஆளுநர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஆளுநர் செய்வது தவறு.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆளுநர் செய்வது தவறு தமிழக அரசியலில் இருந்து எடப்பாடியை நீக்குவோம்: டிடிவி.தினகரன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : governor ,Edappadi ,Tamil Nadu ,DTV ,Dinakaran ,Cuddalore ,Chief Minister MGR ,AAMUK ,general secretary ,Dhinakaran ,MGR ,Manjakuppam ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்...