×

பாஜக எம்பியும், நடிகையுமான ஹேமமாலினியின் மகள் விவாகரத்தா?.. சமூக ஊடகங்களில் பரபரப்பு தகவல்


மும்பை: பாஜக எம்பியும், நடிகையுமான ஹேமமாலினியின் மகள் தனது கணவருடன் விவாகரத்து பெறவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் நட்சத்திர ஜோடியான தர்மேந்திரா – ஹேமமாலினியின் (பாஜக எம்பி) மகள் ஈஷா தியோல் என்பவருக்கும், பரத் தக்தானி என்பவருக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஈஷா தியோல் தனது கணவர் பரத் தக்தானியை விவாகரத்து செய்யப் போக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செய்தி வலைத்தளமான ‘பாலிவுட் லைஃப்’ வெளியிட்ட செய்தியில், கடந்த ஆங்கில புத்தாண்டு தினத்தன்று பெங்களூருவில் நடந்த பார்ட்டி ஒன்றில் பாரத் தக்தானியும், அவரது காதலியும் ஒன்றாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பரத் தக்தானியின் காதலி பெங்களூருவில் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த செய்திகளுக்கு ஈஷா தியோல் குடும்பத்தினர் யாரும் இதுவரை எந்த ரியாக்ஷனும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் ஈஷா தியோல் – பரத் தக்தானி ஜோடி பிரியவில்லை என்றும் கூறிவருகின்றனர். ஆனால் ஈஷா தியோல், தனது குழந்தைகளுடன் தனித்து வாழ்வதாக பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருவதால் ஈஷா தியோல் – பரத் தக்தானி ஜோடி விவாகரத்து தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகின்றன.

The post பாஜக எம்பியும், நடிகையுமான ஹேமமாலினியின் மகள் விவாகரத்தா?.. சமூக ஊடகங்களில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Hemamalini ,MUMBAI ,Bollywood ,Dharmendra ,Isha Deol ,Bharat Taktani ,
× RELATED உத்தவ், சரத்பவாருடன் மம்தா பானர்ஜி...