×

மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் கோடி இழப்பு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,501 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. வர்த்தக நேரம் முடிவதற்கு முன் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,429 புள்ளிகளாக குறைந்து மீண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 460 புள்ளிகள் சரிந்து 21,572 புள்ளிகளானது. இந்தியப் பங்குச் சந்தைகளில் பங்கு விலைகள் கடுமையாக சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

22 ஜூன் மாதத்துக்குப் பின் இன்றுதான் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 2%-க்கு மேல் சரிந்துள்ளன. எச்.டி.எஃப்.சி. வங்கிப் பங்கின் விலை 8% (ரூ.141) சரிந்ததால் அதன் சந்தை மதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி குறைந்துள்ளது. எச்.டி.எஃப்.சி. பங்கு 8.4%, டாடா ஸ்டீல் பங்கு 4%, கோட்டக் வங்கிப் பங்கு 3.6%, ஆக்சிஸ் வங்கிப் பங்கு 3% விலை குறைந்தன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்கு 2.8%, JSW ஸ்டீல், பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு தலா 2.3% விலை குறைந்து வர்த்தகமாயின.

ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்.பி.ஐ., டாடா மோட்டார்ஸ் பங்குகள் தலா 1.6%, பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு 1.5% விலை குறைந்தன. கடந்த சில வாரமாக உயர்ந்துவந்த பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று லாபத்தை எடுத்ததால் சந்தை குறியீட்டு எண்கள் 2%-க்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. சீனப் பொருளாதாரம் பற்றிய செய்திகளும் அவநம்பிக்கை அளிப்பதாக இருந்ததும் முதலீட்டார்கள் பங்குகளை விற்க காரணம் என கூறப்படுகிறது.

The post மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai Stock Exchange ,Mumbai ,Bombay Stock Exchange ,Sensex ,National ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!