- Kalasabhishekam
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
- Tiruvilliputhur
- ஆண்டாள் கோயில்
- திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்
- மார்கழி மாதம்
- திருவிழா
- ஆண்டாள்
- மார்கழி
- பொங்கல்
- கனு மாட்டுப்பொங்கல்
திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாத நீராட்டு விழாவை முன்னிட்டு, ஆண்டாளுக்கு 375 பவுனில் 3 கிலோ எடையுள்ள தங்கக்குடத்தில் தினசரி அபிஷேகம் நடந்தது. மார்கழி மாதம் முடிந்து பொங்கல் திருநாள் தொடங்கிய நிலையில், கணு மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, 3 கிலோ எடையுள்ள தங்கக்குடத்திற்கு கலசாபிஷேகமும், ஆண்டாள், ரங்கமன்னருக்கு சந்தனக்காப்பு திருமஞ்சனமும் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாள்கோவிலில் தங்கக்குடத்திற்கு மலர் மாலைகள் சூடி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
பின்னர் கலச பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, கணு பொங்கலை முன்னிட்டு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சுமார் 20 கிலோ சந்தனத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர். தங்கக்குடம் கலசாபிஷேகம், ஆண்டாள் ரங்கமனாருக்கு நடந்த சிறப்பு திருமஞ்சனம் ஆகியவற்றை கண்டு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நேற்று கோயிலில் குவிந்தனர்.
The post திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 3 கிலோ தங்கக்குடத்திற்கு கலசாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.