×

முடக்கத்தான் கீரை சட்னி

தேவையான பொருட்கள்:

முடக்கத்தான் கீரை – 1/4 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
வரமிளகாய் – 3
பூண்டு – 2-3 பல்
நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
புளி – ஒரு சிறிய துண்டு
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குறைவான தீயில் வைத்து முடக்கத்தான் கீரையை 7 நிமிடம் வதக்க வேண்டும். பின் வதக்கிய முடக்கத்தான் கீரையை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் துருவிய தேங்காய், புளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும். பிறகு வதக்கிய பொருட்கள் அனைத்தையும் குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு, புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான முடக்கத்தான் கீரை சட்னி தயார்.

The post முடக்கத்தான் கீரை சட்னி appeared first on Dinakaran.

Tags :
× RELATED பனீர் கபாப்