×

2வது ஆண்டாக 2023லும் சீன மக்கள் தொகை குறைந்துள்ளதாக சீன தேசிய புள்ளியியல் துறை அறிவிப்பு..!!

சீனா: தொடர்ந்து 2வது ஆண்டாக 2023லும் சீன மக்கள் தொகை குறைந்துள்ளதாக சீன தேசிய புள்ளியியல் துறை அறிவித்துள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்த சரிவை தடுக்க இயலவில்லை. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உலக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்து வந்த சீனா, இதனால் 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக சீன மக்கள் தொகை கணிசமான அளவு குறைந்தது.

2022ஐ விட சீன மக்கள் தொகை 2023ல் 20.8 லட்சம் குறைந்து 140 கோடியே 96 லட்சத்து 70 ஆயிரமாக உள்ளது. 2021ஐ விட 2022ல் சீன மக்கள் தொகை 8,50,000 குறைந்த நிலையில் 2023ல் 2 மடங்கு அதிகமாக 20.8 லட்சம் சரிந்துள்ளது. 2022ல் சீனாவில் 95.6 லட்சம் பேர் புதிதாக பிறந்த நிலையில் 2023ல் பிறப்பு எண்ணிக்கை 90.2 லட்சமாக குறைந்துவிட்டது.

அதிகரித்துவந்த மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை 1980களில் செயல்படுத்தியது சீனா. அரசின் கட்டுப்பாட்டால் மக்கள் தொகை வளர்ச்சி கட்டுக்குள் வந்ததை அடுத்து 2016ல் ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்தியது.2021லிருந்து ஒரு குடும்பத்துக்கு 3 குழந்தைகளை அனுமதிக்க முடிவெடுத்த போதிலும் மக்கள் தொகை குறைவதை தடுக்க. மக்கள் தொகை குறைந்தால் வரும் ஆண்டுகளில் உழைக்கும் வயது உடையவர்கள் எண்ணிக்கை குறையும் என்று சீனா கவலை தெரிவித்துள்ளது.

The post 2வது ஆண்டாக 2023லும் சீன மக்கள் தொகை குறைந்துள்ளதாக சீன தேசிய புள்ளியியல் துறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chinese National Bureau of Statistics ,China ,Chinese government ,
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...