×

ஆம்பூரில் கட்சியினர் அதிர்ச்சி; அதிமுக பேனரில் எம்ஜிஆர் படத்திற்கு பதில் நடிகர் அரவிந்த்சாமியின் புகைப்படம்: சமூக வலைதளங்களில் கிண்டல்

ஆம்பூர்: ஆம்பூரில் அதிமுக பேனரில் எம்ஜிஆர் போட்டோவுக்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமியின் படம் இடம்பெற்றது. இது சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், மறைந்த அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதற்காக கீழ்மிட்டாளம் அதிமுக கிளை சார்பில் 35 பேர் படங்கள் கொண்ட பேனர் தயார் செய்யப்பட்டது. அதில் முன்னாள் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா, தற்போதைய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் ஆகியோரது படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் எம்ஜிஆரின் படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி, எம்ஜிஆராக நடித்த ஒரு படத்தின் போட்டோ அந்த பேனரில் இடம் பெற்றிருந்தது. இதைக்கண்ட பலர் எம்ஜிஆரை அடையாளம் தெரியாமல் அரவிந்த்சாமியின் படம் வைப்பதா? என அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அதில், `கட்சி நிறுவன தலைவரின் படம் கூட தெரியாமல் அச்சடித்து ஒட்டுவதா? என பலர் விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதனை தாமதமாக அறிந்த அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பேனர் தயாரித்த அச்சகம் மற்றும் கட்சியினரை கண்டித்தனர். பின்னர் இரவோடு இரவாக அதனை அகற்றிவிட்டு எம்ஜிஆர் படத்துடன் கூடிய புதிய பேனர் வைத்தனர்.

The post ஆம்பூரில் கட்சியினர் அதிர்ச்சி; அதிமுக பேனரில் எம்ஜிஆர் படத்திற்கு பதில் நடிகர் அரவிந்த்சாமியின் புகைப்படம்: சமூக வலைதளங்களில் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Ampur ,Aravindsamy ,MGR ,AIADMK ,Chief Minister ,Madanur West Union ,Tirupathur ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...