×
Saravana Stores

ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்: நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்

மதுரை: ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம் என சு.வெங்கடேசன் எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில் , ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள், சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களுடன் ஒப்பிட்டு உவமைப் படுத்தப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வாழ்க்கை இப்படியிருக்க, அதனை வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது” என்று பதிவிட்டுள்ளார். டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் எழுதிய ’ஜல்லிகட்டு ஒரு சனாதனத் திருநாள்’ என்ற கட்டுரையை பகிர்ந்து, கருத்தை  தெரிவித்திருந்தார்.

இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்”.உலகம் அதிர உரக்கச் சொல்வோம், தமிழும் திமிலும் எமது பேரடையாளம் என்று சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு ஒரு சனாதனத் திருநாள் என்ற கட்டுரையை நிர்மலா சீதாராமன் பகிர்ந்ததற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தார்.

The post ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்: நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Su Venkatesan ,Nirmala Sitharaman ,Madurai ,Su.Venkatesan ,Kandanam ,Union Finance Minister ,
× RELATED இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம் : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்