×

கடும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  ஜனவரி மாதம் வந்துவிட்டாலே மார்கழியின் குளிர் வாட்டி வதைக்க ஆரம்பித்து விடும். குறிப்பாக வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களை நடுங்க வைக்கும். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதற்கு இந்த காலகட்டத்தை பயன்படுத்தி கொள்வர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த 5 நட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும்.

மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். மாநில வாரியாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும். இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை குறைந்துள்ளது.

டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் பனி அதிகமாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் 15ஆம் தேதி முதல் கடும் பனி காணப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டும் கடும் பனிப்பொழிவு இருக்கும். அதன்பிறகு நிலைமை சற்றே மாறுபடும். பனியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் மேற்குவங்கம், ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பிகார், மேற்குவங்கத்தில் இமயமலையை ஒட்டிய பகுதிகள், சிக்கிம், மத்தியப் பிரதேசத்தின் வடக்கு பகுதி ஆகியவற்றில் இரண்டு நாட்கள் நிலைமை மோசமாக தான் காணப்படும்.

பனியை சமாளிக்க பொதுமக்கள் உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் வரும் 15ஆம் தேதி முதல் அடர் பனி இருக்கும் என்று தெரிவித்தனர். மழைப்பொழிவு நிலவரத்தை பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர், லடாக், கில்ஜித், பல்திஸ்தான், முசாபர்பாத், ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் லேசாக இருக்கும். கூட பனியின் தாக்கம் சுற்றி வளைக்கும். இது அடுத்த இரண்டு நாட்கள் நீடிக்கும்.

The post கடும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : northern states ,India Meteorological Department ,Delhi ,Margazhi ,North ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...