×
Saravana Stores

‘சர்வதேச போட்டியாக மாற்றவே இலங்கையில் நடந்தது ஜல்லிக்கட்டு’

சிவகங்கை: இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று சிவகங்கை அருகே கத்தப்பட்டு கிராமத்தில் செந்தில் தொண்டமான், பொதுமக்களுடன் இணைந்து மாட்டு பொங்கல் கொண்டாடினார். இதில் இலங்கை கிழக்கு மாகாண குடிநீர் வழங்கல் மற்றும் எஸ்டேட் துறை அமைச்சர் ஜீவா தொண்டமான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் செந்தில் தொண்டமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இலங்கையில் நமது தமிழர் பாரம்பரியத்தையும் கலாசசாரத்தையும் தொடர்ந்து பாதுகாத்து வருகிறோம். ஜல்லிக்கட்டு போட்டியை சர்வதேச போட்டியாக மாற்றும் முயற்சியாகவே இந்த ஆண்டு இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது’ என்றார்.

The post ‘சர்வதேச போட்டியாக மாற்றவே இலங்கையில் நடந்தது ஜல்லிக்கட்டு’ appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Sri Lanka ,Sivagangai ,Senthil Thondaman ,Governor ,Eastern Province ,Mattu Pongal ,Kathapatu village ,Minister of Water Supply ,Jeeva ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை