×

அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி

தாராபுரம்: மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 21 பேர் வேன் ஒன்றில் கோவை ஈஷா யோகா மையத்துக்கு வந்தனர். பின்னர் நேற்று ஊர் திரும்பினர். அப்போது தாராபுரம்-ஒட்டன்சத்திரம் அமராவதி ஆற்றில் அனைவரும் கீழே இறங்கி குளித்தனர். இதில் பள்ளி மாணவர் ஹரிஹரன், சின்ன கருப்பு, பாக்கியராஜ் ஆகிய 3 பேரும் ஆற்றின் ஆழமான பகுதியில் சென்று நீரில் மூழ்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 பேரையும் சடலமாக மீட்டனர். இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Amravati River ,Tharapuram ,Alangulam ,Goi Isha Yoga Centre ,Tarapuram ,Ottansatram Amravati ,
× RELATED அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!