×

சேவல் பந்தயம் களை கட்டியது


திருமலை: ஆந்திராவின் கோதாவரி மற்றும், கடலோர மாவட்டங்களில் சங்கராந்தி பண்டிகை என்றாலே சேவல் பந்தயம் பல கோடி பணம் வைத்து விளையாடப்படுவது வழக்கம். இதில் சூதாட்டம், வன்முறை, கலவரங்கள் நடந்தால் கடந்த ஆண்டு சேவல் பந்தயம் கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு அனுமதி கிடைத்ததால் சேவல் பந்தயம் நடத்துபவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதில் கோனலசீமா மாவட்டம் அமலாபுரம், உப்பலகுப்தம், அல்லாவரம் ஆகிய மண்டலங்களில் சேவல் சண்டைக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த கிழக்கு கோதாவரி மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சேவல் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பெரிய அளவில் பணம் கை மாறுகிறது. ஒருங்கிணைந்த மேற்கு கோதாவரி மாவட்டத்திலும் சேவல் பந்தயம் கோலாகலமாக நடந்து வருகிறது.

அம்பேத்கர் கோனலசீமா மாவட்டம், மும்மடிவரம் தொகுதி, கத்ரேனிகோனா மண்டல் கெத்தனப்பள்ளியில் சேவல் பந்தயம் நடக்கிறது. தெண்டுலுரு, அச்சந்தா, பாலகொல்லு, நர்சாபுரம், ஜங்காரெட்டி குடேம். சில இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் முதல் சேவல் பந்தயத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சேவல் சண்டையை ரசித்து பார்த்தனர்.

The post சேவல் பந்தயம் களை கட்டியது appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Sankranti festival ,Godavari ,Andhra ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...