×

ஓடும் ரயிலில் இங்கிலாந்து இளம்பெண் பலாத்காரம்: ஒப்பந்த தொழிலாளி கைது


பெங்களூரு: கேரளாவில் இருந்து கர்நாடகா சென்ற ரயிலில் இங்கிலாந்து பெண் ஒருவரை ஒப்பந்த தொழிலாளி பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டைச் சேர்ந்த பசவராஜ் (30) என்பவர், ரயியிலில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகள் மற்றும் தலையணைகளை சப்ளை செய்ய ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பணியாற்றிய போது, அந்த ரயிலில் 30 வயது இங்கிலாந்து பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த பெண் கேரளாவில் இருந்து ஹம்பிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த பெண், போர்வைகள் மற்றும் தலையணைகளை சப்ளை செய்யும் பசவராஜிடம், மருத்துவ உதவிகள் ஏதேனும் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். உடனே அவர், ரயில் பெட்டியின் கழிவறைக்கு செல்லுமாறும், அப்போது தான் உதவுவதாக கூறினார். அதனை நம்பிய அந்தப் பெண் கழிவறைக்கு சென்றார். திடீரென உள்ளே நுழைந்த பசவராஜ், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ரயில்வே அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார். அதனடிப்படையில் பசவராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஓடும் ரயிலில் இங்கிலாந்து இளம்பெண் பலாத்காரம்: ஒப்பந்த தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : BANGALORE ,KERALA ,KARNATAKA ,Pasavaraj ,Bagalkot, Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடக முன்னாள் முதலமைச்சர்...