×

அதிகாரிகளை பேட்டால் தாக்கிய நிலையில் கிரிக்கெட் வாரிய தலைவராக பாஜக எம்எல்ஏவை தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு


இந்தூர்: மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா, இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. மத்திய பிரதேச நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சரான கைலாஷ் விஜய்வர்கியா 2010 முதல் 2020ம் ஆண்டு வரை இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார். இவரது மகனான பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா, தற்போது இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவரது தேர்வுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கு முக்கிய காரணம், கடந்த 2019ம் ஆண்டு இந்தூர்-3 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு பிரச்னை எழுந்தது.

இதனை சரிசெய்வதற்காக, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது அங்குச் சென்ற எம்எல்ஏ ஆகாஷ் விஜய் வர்கியாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ‘இன்னும் 5 நிமிடத்தில் அதிகாரிகள் இங்கிருந்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு’ என்று விஜய் வர்கியா எச்சரித்தார். அடுத்த சில நிமிடங்களில் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து ஆவேசமடைந்த ஆகாஷ், தனது கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் அதிகாரிகளை அடித்து விரட்டினார். இந்த சம்பவம் வீடியோ காட்சியாக சமூகவலை தளத்தில் வைரலானது.

அதிகாரிகள் தரப்பில் எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா மீது வழக்கு தொடுத்தனர். அதன்படி, அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் ஜாமீன் கிடைக்கும்வரை ஆகாஷ் விஜயவர்ஷியாவும் சிறையில் இருந்தார். பின்னர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியான அவருக்கு, தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அதிகாரியை தாக்கியதற்காக வருத்தப்படவில்லை மீண்டும் பேட்டை எடுக்கும் வாய்ப்பு ஏற்படாது’ என்றார். இந்த நிலையில் தான், ஆகாஷ் விஜய்வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிகாரிகளை பேட்டால் தாக்கிய நிலையில் கிரிக்கெட் வாரிய தலைவராக பாஜக எம்எல்ஏவை தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,MLA ,board ,Indore ,Madhya Pradesh ,BJP MLA ,Akash Vijayvargiya ,Indore Cricket Board ,Madhya ,Pradesh ,Urban ,Development ,and Housing Minister ,Kailash Vijayvargiya ,Indore Cricket ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்