×

கொண்டங்கி ஏரியில் குளிக்க தடை: திருப்போரூர் போலீசார் அறிவிப்பு


திருப்போரூர்: திருப்போரூர் அருகே கொண்டங்கி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் நீர் நிரம்பி கலங்கலில் இருந்து வெளியேறும்போது அருவிபோல் நீர் கொட்டும். இந்த காட்சியை காண சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து ஏரியில் குளிப்பார்கள். இதனால் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டது. இந்தநிலையில், கொண்டங்கி ஏரியை யூ டியூப்பில் பார்த்துவிட்டு குளிக்க வந்த தந்தை, மகள் ஆகியோர் ஏரியில் குளிக்கவந்தபோது ஏரியின் அருகே விபத்தில் சிக்கியதில் அவரது 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. இதனால் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கூறியதாவது; கொண்டங்கி ஏரி முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரியில் சோப்பு, ஷாம்பு போட்டு குளித்து சுற்றுலாத் தலமாக மாற்றுவது பாதுகாப்பற்ற செயலாகும். எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் சுற்றுலாத்தலம் என்று நினைத்து கொண்டங்கி ஏரிக்கு வரவேண்டாம். ஏரியில் குளிப்பதும் இறங்கி வீடியோ எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மழைக்காலமான நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும். தற்போது ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, கொண்டங்கி ஏரியில் குளிக்கவும் வீடியோ எடுக்கவும் வரவேண்டாம். இவ்வாறு கூறினார். இதையடுத்து கொண்டங்கி ஏரியில் குளிப்பவர்களை தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

The post கொண்டங்கி ஏரியில் குளிக்க தடை: திருப்போரூர் போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppurur ,Tiruporur ,Kondangi ,Kalangal ,Chennai ,Kondanki Lake ,Tiruppurur Police ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்