×
Saravana Stores

திருப்போரூர் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்: வேஷ்டியில் அசத்திய போலீசார்


திருப்போரூர்: பொங்கல் பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைவரும் வேட்டி, சட்டை மற்றும் பெண்கள் புடவை அணிந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் நேற்று பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காவல் நிலையத்தின் முன்பு பொங்கல் பண்டிகையை குறிக்கும் வகையில் வண்ண கோலம் வரைந்திருந்தனர். பின்னர் மண் பானையில் பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள் வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் காவலர்கள் அனைவரும் வேட்டி, சட்டையுடன் வந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்களை அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். “கடும் பணிச்சூழல் உள்ள நிலையில் இதுபோன்ற பண்டிகை நேரங்களில் பாரம்பரிய விழாவை கொண்டாடியது தங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றனர்.

The post திருப்போரூர் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்: வேஷ்டியில் அசத்திய போலீசார் appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Thiruporur Police Station ,Vashti ,Thiruporur ,Pongal ,Tiruporur police station ,Chengalpattu district ,Asatya ,Veshdi ,
× RELATED பொங்கல் திருவிழா