×
Saravana Stores

திருவள்ளுவரின் ஞானம், நமது தேசத்தின் கருத்துகள், அடையாளத்தை செழுமைப்படுத்தியது: ஆர்.என்.ரவி!

சென்னை: காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிய சனாதன பாரம்பரியத்தின் துறவியான திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். திருவள்ளுவரின் ஞானம், நமது தேசத்தின் கருத்துகள், அடையாளத்தை செழுமைப்படுத்தியது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று தனது X தள பதிவில் பதிவிட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி தனது X தளத்தில் கூறியிருப்பதாவது; திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post திருவள்ளுவரின் ஞானம், நமது தேசத்தின் கருத்துகள், அடையாளத்தை செழுமைப்படுத்தியது: ஆர்.என்.ரவி! appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar ,R. N. Ravi ,Chennai ,Governor of ,Tamil ,Nadu ,Tamil Nadu Governor's House ,Kavi ,Thiruvalluwa ,Governor ,Ravi ,Thiruvalluwar ,
× RELATED நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு...