- ஐயப்பன்
- அய்யபசுவாமி
- சபரிமலை பொன்னம்பால
- திருவனந்தபுரம்
- ஐயப்பன்
- அய்யப்பன்
- மகாராஜோதி
- பொன்னம்பல மதம்
- சரணா
- கோஷ்
- சுவாமி
- சாரனம் அய்யப்பா
திருவனந்தபுரம்: சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாக ஐயப்பன் காட்சி அளித்தார். சரண கோஷம் விண்ணை பிளக்க சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். மகர நட்சத்திரமும், மகரஜோதி 3 முறையும் காட்சி தந்ததை கண்டு பக்தர்கள் சரண முழக்கங்களை எழுப்பினர். பக்தர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என எழுப்பிய பக்தி முழக்கங்கள் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது.
பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். ஆபரணங்களை அணிந்து அரசனாக காட்சியளிக்கும் ஐயப்பனை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். சபரிமலையில் ஜோதியை காண வசதியாக பக்தர்களுக்கு 10 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சரங்கொத்தி, பாஞ்சாலி மேடு, புல்லுமேடு உள்ளிட்ட இடங்களில் வியூ பாயிண்ட் அமைக்கப்பட்டிருந்தது. பல்லாயிரம் பக்தர்கள் குவிந்து வழிபட்ட நிலையில் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மகரஜோதியையொட்டி சபரிமலையில் காலை 11.30 வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மகரஜோதி தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களின் வசதிக்காக ம்பையில் இருந்து 800 பேருந்துகள் இயக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிச.30-ல் திறக்கப்பட்டது.
The post “சுவாமியே.. சரணம் ஐயப்பா..!” – சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பசுவாமி appeared first on Dinakaran.