×

47வது சென்னை புத்தக காட்சி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: புத்தகங்கள் வாங்க குவிந்த வாசகர்கள்

சென்னை: சென்னை புத்தக காட்சியில் நேற்று விடுமுறை நாளில் புத்தகம் வாங்க வாசகர்கள் குவிந்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் புத்தகங்கள் வாங்க அதிகளவில் மக்கள் படையெடுத்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆனால் பூர்வீக சென்னை வாசிகள், அரசு அலுவலர்கள், அரசு அதிகாரிகள் அதிக அளவில் வந்தனர். பலரும் விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்த புத்தக காட்சிக்கு குழந்தைகளை அழைத்து வந்தனர். சிறுவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அரங்குகளில் உள்ள புத்தகங்களை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இந்த புத்தக காட்சியில் தினகரன்- சூரியன் பதிப்பகத்தின் புத்தக அரங்கு எப் 29 என்ற எண்ணில் அமைந்துள்ளது. இந்த அரங்கில் மாணவர்களின் நலனுக்காக வெளியிடும் வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம், போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் புத்தகம் போன்ற பல்வேறு புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக தினகரன் ஸ்டாலில் குவிந்து புத்தகங்களை வாங்கிச்சென்று வருகின்றனர். மேலும் 164சி அரங்கில் தினகரன் நாளிதழின் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் குங்குமம், தோழி, டாக்டர் மற்றும் தினகரன் ஆன்மிகம், விவசாயம், கிச்சன் ஆகிய இதழ்களும் பார்வைக்கு உள்ளன.

 

The post 47வது சென்னை புத்தக காட்சி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: புத்தகங்கள் வாங்க குவிந்த வாசகர்கள் appeared first on Dinakaran.

Tags : 47th CHENNAI BOOK FAIR ,CHENNAI ,Chennai Book Fair ,South Indian Booksellers and Publishers Association ,Nandanam YMCA Grounds ,Chennai.… ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...