×

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் போகி பண்டிகையில் ரப்பர் டயர், பிளாஸ்டிக் கழிவு எரிப்பது குறைந்தது

சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்காணிக்கும் பொருட்டு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போகிக்கு முந்தைய (10ம் தேதி முதல் 11ம் தேதி வரை) மற்றும் போகி நாளில் (13ம் தேதி முதல் 14ம் தேதி வரை) 24 மணிநேரம் காற்றின் தர ஆய்வை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், 13ம் தேதி காலை 8 மணி முதல் 14ம் தேதி காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு, மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு அனைத்து 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட (24 மணி நேர சராசரி) தர அளவான 80 மைக்ரோகிராமிற்கு உட்பட்டு இருந்தது. காற்றில் கலந்துள்ள நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 52 மைக்ரோகிராம் முதல் அதிகபட்சமாக 111 மைக்ரோகிராம் வரை இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட 2.5 24 மணி நேர சராசரி தர அளவு 60 மைக்ரோகிராம். மேலும், காற்றில் கலந்துள்ள நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 118 மைக்ரோகிராம் முதல் 289 மைக்ரோகிராம் வரை இருந்தது. அதேபோல், காற்று தர குறியீடு பொருத்தமட்டில் குறைந்தபட்சமாக அண்ணாநகரில் 131 ஆகவும் (மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 270 ஆகவும் (மோசமான அளவு) இருந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

போகி தினத்தில் சென்னை விமான நிலையத்தில் விமானம் வருகை மற்றும் புறப்படுவதில் தடங்கல் காணப்பட்டது, இதற்குக் காரணம் அதிக ஈரப்பதம் குறைந்த காற்றின் வேகம் குறைவான பார்வைக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பிற அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் காரணமாக, போகி தினத்தன்று இரவு ரோந்துப் பணியின் போது, பொதுமக்களிடையே ரப்பர் டயர்கள், டியூப்கள், பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருட்களை எரிப்பது வெகுவாக குறைந்துள்ளது. இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து அரசு துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மற்றும் குறிப்பாக பொதுமக்களுக்கு புகை குறையாத போகி பண்டிகையை கொண்டாட ஒத்துழைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளது.

 

The post தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் போகி பண்டிகையில் ரப்பர் டயர், பிளாஸ்டிக் கழிவு எரிப்பது குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pollution Control Board ,Bogi festival ,Chennai ,Chennai Corporation ,TNB ,Bogi ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...