×

வெளிநாடுகளில் பயன்படுத்திக் கொள்ள இந்திய ரூபாய்க்கு 35 நாடுகள் ஒப்புதல்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக் கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன என்று ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், ‘அம்பேத்கர் சட்டமேதை மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்க முற்பட்டபோது அதனை எதிர்கொள்ள, அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

லண்டன் பொருளாதார கல்வி நிலையத்தில் அம்பேத்கர் தாக்கல் செய்த இந்திய ரூபாய் தொடர்பான ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான், கடந்த 1935ம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளது. இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் அந்த நாடுகளுக்குப் பயணிப்போது அந்த நாட்டுப் பணம் அல்லது அமெரிக்கா டாலரைப் பயன்படுத்தாமல், இந்திய ரூபாயை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்’ என்றார்.

The post வெளிநாடுகளில் பயன்படுத்திக் கொள்ள இந்திய ரூபாய்க்கு 35 நாடுகள் ஒப்புதல்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : EU ,New Delhi ,Union Law Minister ,Arjun Ram Makwal ,Delhi ,Arjun ,Union Minister ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...