×

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் தொடங்கியது

கான்பெரா; ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நோவக் ஜோகோவிச் ஏற்கனவே 10 முறை ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றி சாதனையாளராக திகழ்கிறார். காயம் காரணமாக முன்னாள் சாம்பியனான ரஃபேல் நடால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்கவில்லை. மகளிர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக், முன்னாள் சாம்பியன் சோபியா கெனினை எதிர்கொள்கிறார்.

The post ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Australian Open ,Grand Slam ,Melbourne ,Canberra ,Novak Djokovic ,Serbia ,Australian Open Tennis ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்