×

லால்குடி நகராட்சியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட விழிப்புணர்வு

 

லால்குடி, ஜன.14: திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சிப் பகுதியில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் துரைமாணிக்கம் கலந்து கொண்டார். லால்குடி நகராட்சி சார்பில் பொங்கல் பண்டிகைக்கு முந்தையநாள் போகி பண்டிகையை புகையில்லா போகியாக கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. லால்குடி நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம் தலைமை வகித்தார்.

இதில் நகராட்சி ஆணையர் குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் போகி பண்டிகையன்று பழைய துணிகள், டயர்களையும், கழிவு பொருட்களையும் பொது இடங்களில் தீவைத்து எரிக்க வேண்டாம், சாலைகளில் வீசி எறிய வேண்டாம் என்றும், நகராட்சி மூலம் அனுப்பப்படும் வாகனங்களில் அவற்றை வழங்கி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி புகையில்லா போகி விழாவை சிறப்பாக கொண்டாடுவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post லால்குடி நகராட்சியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Bogi festival ,Lalgudi Municipality ,Lalgudi ,City Council ,President ,Duraimanickam ,Smoke Free Bogi Festival ,Lalgudi Municipality, ,Trichy District ,Pongal festival ,
× RELATED லால்குடி அருகே மீன் பிடிப்பதில்...