- பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
- பட்டுக்கோட்டை நகராட்சி
- பட்டுக்கோட்டை
- சமத்துவ பொங்கல் விழா
- பட்டுக்கோட்டை நகராட்சி, தஞ்சாவூர் மாவட்டம்
- மாநகராட்சித் தலைவர்
- சண்முகப்பிரியா செந்தில்குமார்
- சமத்து பொங்கல் விழா
- நகராட்சி அலுவலகம்
- மாநகரப் பொறியாளர்
- குமார்
- பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
- தின மலர்
பட்டுக்கோட்டை, ஜன.14: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகராட்சி அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் குமார், சுகாதார அலுவலர் நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில் குமார், பொறியாளர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் இணைந்து ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் நின்று கயிறு இழுத்தல் போட்டி வெகு விமரிசையாக நடந்தது. இது பார்ப்பவர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
The post பட்டுக்கோட்டை நகராட்சியில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.