- தமிழர் திருநாள் கொண்டாட்டம்
- அவ்வையார்
- மழலையர் பள்ளி
- தஞ்சாவூர்
- அவ்வையார் மழலையர் தொடக்கப்பள்ளி
- அவ்வையார் கோவில்
- திருவையாறு வடக்கு வீதி
- தமிழர் திருநாள் விழா
- அவ்வையார் மழலையர் பள்ளி
தஞ்சாவூர், ஜன.14: திருவையாறு வடக்கு வீதியில் அவ்வையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அவ்வையார் மழலையர் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் அவ்வையாருக்கு பொங்கல் படையலிட்டு ஆத்திச்சூடி சொல்லி பிரார்த்தனை செய்து சூடம் காண்பித்து வழிபாடு செய்தார்கள். மழலையர் மாணவ மாணவிகள் ஒயிலாட்டம் குச்சியாட்டம் கும்மியாட்டம் சிலம்பம் குறளிசை திருவாசகம் தேவாரம் வீணை இசை யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலுக்கு நடனம் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை சேலை கட்டி நாட்டுப்புற பாடலுக்கு நடனம் என பலவகையான கலை நிகழ்ச்சிகளை ஆடி பாடி கொண்டாடினர்.
முடிவில் மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் ஆகியோர் வயதிற்கு மூத்தவர்களிடம் மரியாதை கொடுத்து மரியாதைக்குரிய சொற்களை பயன்படுத்தி அழைத்தல். பெற்றோர்களுக்கு வீட்டில் சிறுசிறு உதவிகள் செய்தல். காலை மாலை உடலை சுத்தம் செய்வதற்கு குளித்தல், காலை எழுந்தவுடன் பற்களை விளக்கிவிட்டு படித்தல், நல் பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டு வளர்தல். நல்ல நாட்களில் தாய் தந்தை தாத்தா பாட்டி ஆசிரியர் குரு போன்ற மூத்தவர்களிடம் வாழ்த்து பெறுதல். வீட்டையும் வீட்டின் சுற்றுப்புறத்தையும் போன்ற வாசகங்களை சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் வெகு விமர்சையாக சிறப்பாகவும் செய்திருந்தார்கள்.
The post அவ்வையார் மழலையர் பள்ளியில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.