×

குளித்தலையில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

 

குளித்தலை, ஜன. 14: தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளமையம் குளித்தலையில் 2023-24 புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம் தன்னார்வலர்களுக்கான ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முற்றிலும் எழுத படிக்கத்தெரியாத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான முதல் பயிற்சியை மேற்பார்வையாளர் ராகுகாலம் தொடங்கி வைத்து தன்னார்வலர்களுக்கு பயிற்சியின் நோக்கம் குறித்து கூறினார். மேலும் அடிப்படை பயிற்சி தமிழ் கணிதம் மற்றும் கூடுதல் திறன்கள் சட்ட அறிவு போக்சோ சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், பேரிடர் மேலாண்மை , மரக்கன்று நடுதல், நீர், மண் மேலாண்மை, உடல் நலமும் சுகாதாரமும், பணமில்லா பரிமாற்றம், ஏடிஎம்மில் பணம் எடுத்தல், அரசு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பித்தல் ஆகிய திறன்கள் குறித்து கருத்தாளர்கள்,

ஆசிரியர் பயிற்றுநர் இந்திரா மற்றும் ஆசிரியர் கர்த்திக் எடுத்துக்கூறினர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 59 தன்னார்வலர்கள் கலந்து கோண்டனர். ஒவ்வொரு மையத்திற்கு தேவையான எழுது பொருட்களான சிலேட், பென்சில் நோட், புத்தகங்கள் வழங்கப்பட்டது.

The post குளித்தலையில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Integrated School Education Regional Center ,Kulithalai ,
× RELATED குளித்தலையில் முதுகு தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை இலவச மருத்துவ முகாம்