- சமத்து பொங்கல் விழா
- திருப்பூர் பெருநகர மாவட்டம் மத்யமுக்
- திருப்பூர்
- சமாட்டுவ பொங்கல் திருவிழா
- ஆர். நாகராஜ்
- மதிமுக
- திருப்பூர் நகர மாவட்டம்
- 24 வது வார்டு கவுன்ச
திருப்பூர், ஜன.14: திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் மும்மதங்களை சேர்ந்த 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. மதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. மற்றும் திலீபன் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளை முன்னிட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நல்லாசியுடனும், துரை வைகோ நல்லாதரவுடனும் மும்மதத்தினர் கலந்துகொள்ளும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.
26-வது ஆண்டு பொங்கல் விழா நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு திருப்பூர் சாமுண்டிபுரம் நாகாத்தாள் கோவில் அருகே வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்கள் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவுக்கு ம.தி.மு.க. மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் செந்திலதிபன் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். விழாவில் ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் விழாவின் தொடக்கமாக நேற்று பொங்கல் விழாவில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.நாகராஜ் பொங்கல் பானை, அடுப்பு உள்பட பொங்கல் வைக்க தேவையான பொருட்களை வழங்கினார்.
The post திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.