×

திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு

 

திருப்பூர், ஜன.14: தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு காணொலி காட்சி வாயிலாக வாலிபாளையம் யூனியன் மில் சாலையில் உள்ள பனிரெண்டார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர், செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும அனைத்து கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : DMK IT ,Tirupur ,North District DMK ,Panirendar Wedding Hall ,Union Mill Road, Valipalayam ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...