×

பெண்களின் வருமானத்தை அதிகரிக்க 1 கோடி பேருக்கு ட்ரோன் வழங்க முடிவு: வேலூரில் இணை அமைச்சர் பேச்சு

வேலூர், ஜன.14: பெண்களின் அறிவுத்திறன், வருமானத்தை அதிகாரிக்க 1 கோடி பேருக்கு மத்திய அரசு சார்பில் ட்ரோன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வேலூரில் இணை அமைச்சர் பேசினார். வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழச்சியில், சாலைப் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் 30க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது: கொரோனா தொற்று காலத்தில், உலகத்திலேயே 222 கோடி கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட ஒரே நாடு நம் இந்தியா தான். சீன நாடு கூட கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தது. அந்த நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு பொதுமக்களுக்கு சென்று சேர்வதற்கு முன் பலர் உயிரிழந்தனர். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி 113 நாடுகளுக்கு வழங்கப்பட்டது. இதனால் பல நாடுகளில் உள்ள மக்கள் உயிர் காக்கப்பட்டது.

இதன் காரணமாக இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. நாட்டில் ஏழை, எளிய மக்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்படும்போது அவர்களால் பணம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையறிந்த பிரதமர் மோடி அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்பதற்காக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

எனவே பிரதமர் மோடி அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் மூலம் காணொலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வேளாண் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் இயந்திரம், முதற்கட்டமாக நாட்டில் உள்ள ஒரு கோடி பெண்களுக்கு சார்பில் வழங்கப்பட உள்ளது. இதற்குக் காரணம் பெண்கள் தங்களுடைய அறிவுத்திறனை பயன்படுத்தி வருமானத்தை பல மடங்காக அதிகரிக்க, இயந்திரங்களை நல்ல முறையில் கையாளுவார்கள். எனவேதான் பெண்கள் பெயரில் இந்த ட்ரோன் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

The post பெண்களின் வருமானத்தை அதிகரிக்க 1 கோடி பேருக்கு ட்ரோன் வழங்க முடிவு: வேலூரில் இணை அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : State Minister ,Vellore ,Vellore District ,Perumugai ,Bharatam ,Dinakaran ,
× RELATED 9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள்...