×

எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்துக்கு திமுக தகவல் தொழில் நுட்ப அணி பதிலடி கொடுக்க வேண்டும்

தூத்துக்குடி,ஜன.14: எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்திற்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி பதிலடி கொடுக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசியதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகளையும், திட்டங்களையும், மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். திமுவிற்கு எதிராக செயல்பட்டு தவறான பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் எதிர்கட்சிகளுக்கும் தக்கபதிலடியை நீங்கள் தான் கொடுக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் நம் இயக்கத்தை பற்றி தேவையில்லாத பதிவுகளை தவறாக யார் பதிவு செய்தாலும் அதற்கு தகவல் தொழில்நுட்ப அணியினர் உடனடியாக பதில் அளிக்க வேண்டும். நடைபெறாத சம்பவங்களை யெல்லாம் நடைபெற்றதாக பதிவிடும் பதிவுகளுக்கு உடனடியாக அதற்கு பதில் போட வேண்டும். தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்களையும், மாநில இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வரும் எம்.பி தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி. 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்’ என்றார்.

கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் பழனிக்குமார், பிரபு, அந்தோணிராஜ் என்ற கண்ணன், நாகராஜன், அருணாதேவி, தொகுதி சமூகவலைதள ஓருங்கிணைப்பாளர் பாலமுருகன், தொகுதி மகளிர் ஓருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலகுருசாமி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பார்வதி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, அரசு வக்கீல்ஆனந்தகேப்ரியேல்ராஜ், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், நிக்கோலஸ் மணி, மாநகராட்சி மண்டலத்
தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் பவாணி மார்ஷல் ஜெயசீலி, சரண்யா, மரியகீதா, ஜான்சிராணி, ரெக்ஸின், சரவணக்குமார், சுப்புலட்சுமி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை நன்றி கூறினார். முன்னதாக தமிழகம் முழுவதும் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில அமைப்பாளரும், அமைச்சருமான டிஆர்பி ராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பேசினர்.

The post எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்துக்கு திமுக தகவல் தொழில் நுட்ப அணி பதிலடி கொடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : DMK Information Technology Team ,Thoothukudi ,Minister ,Geethajeevan ,DMK IT team ,North District DMK Information Technology Team ,Thoothukudi Artist Hall ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது