×

சாத்தூர் நெ.மேட்டுப்பட்டியில் சமூக விரோதிகள் புகலிடமான பள்ளி-சுற்றுச்சுவர் எழுப்ப கோரிக்கை

சாத்தூர் : சாத்தூர் அருகே நென்மேனி, மேட்டுப்பட்டி கிராமத்திற்கும் நடுவில் ஏறத்தாழ 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. பெரும்பாலும் விவசாயத்தையே முதன்மை தொழிலாக கொண்ட நென்மேனி, இருக்கன்குடி, மாயூர்நாதபுரம், எம்.நாகலாபுரம், நத்தத்துபட்டி, ராசாப்பட்டி, முடித்தலை, நாருகாபுரம், கைலாசபுரம், மாசார்பட்டி, மாவில்பட்டி, மேலக்கரந்தை, கோசுகுண்டு, ஆத்திபட்டி, கோ. முத்துச்சாமிபுரம், கலிங்கல்மேட்டுப்பட்டி, ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏழை- எளிய மாணவ, மாணவியர் கல்வி பெறும் நோக்கில் 1950ம் ஆண்டில் இப்பள்ளி நிறுவப்பட்டது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர்.ஆனால் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கடந்தும் இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி விடுமுறை நாட்கள், இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளின் புகலிடமாக பள்ளி வளாகம் விளங்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு நலன் கருதி இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சாத்தூர் நெ.மேட்டுப்பட்டியில் சமூக விரோதிகள் புகலிடமான பள்ளி-சுற்றுச்சுவர் எழுப்ப கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chatur Ne.Mettupatti ,Chatur ,Ne.Mettupatti Govt. ,Nenmeni, Mettupatti ,
× RELATED சாத்தூர் அருகே மழை இல்லாததால் கருகும் உளுந்து செடிகள்