×

உள்ளாட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்

நெல்லை, ஜன. 14: நெல்லை, தென்காசி மாவட்ட உள்ளாட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வி.கே.புரம்: விகேபுரம் நகராட்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவை நகர்மன்றத் தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் தலைமை வகித்து துவக்கிவைத்தார். நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரன், நகர்மன்ற துணைத்தலைவர் திலகா முன்னிலை வகித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் கவுன்சிலர்கள் சாரதா, கொளகர்ஜான், இயேசு ராஜா, மற்றும் முத்துராமலிங்கம், சிற்றரசன், ராஜேந்திரன், தளவாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தென்காசி: தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு தலைவர் சாதிர் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, ஆணையாளர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் வசந்தி வெங்கடேஸ்வரன், ராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், சுமதி, காதர்மைதீன், ஜெயலட்சுமி, அபுபக்கர், ராமசுப்பிரமணியன் (எ) சந்துரு, மகேஸ்வரி ஆஷிக் முபினா, ராமசுமதி, முப்புடாதி, நாகூர் மீரான், செய்யது சுலைமான் ரபீக், சுனிதா, கல்பனா,சங்கர சுப்பிரமணியன், நகராட்சி பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார ஆய்வாளர்கள் மகேஸ்வரன், மாதவராஜ் குமார், தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் துரைசாமி, முத்துக்குமார், சுடலைமுத்து, களப்பணி உதவியாளர் ஜித், மதிமுக மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன், திமுக நகர பொருளாளர் சேக்பரீத், அறங்காவலர் இசக்கி ரவி, பொறியாளர் அணி மாவட்டத் தலைவர் தங்கபாண்டியன், திமுக நிர்வாகிகள் சன் ராஜா, கங்காதரன், முரளிரஞ்சித், காமீல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு நகர்மன்றத்தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். ஆணையாளர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதையொட்டி அலுவலக வளாகத்தில் சர்க்கரைப் பொங்கலிட்டு படைத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் நகராட்சி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், நகராட்சி மேலாளர் செந்தில் வேல்முருகன், நகராட்சி கணக்காளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் விஜயகுமார் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்து துவக்கிவைத்தார். நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, ஆணையர் சுகந்தி முன்னிலை வகித்தனர். பொறியாளர் அப்துல் காதர், உதவிப் பொறியாளர் கண்ணன், மேலாளர் சண்முகவேல், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர் சிவா, தேர்தல் பிரிவு மாரியப்பன், சாமித்துரை, கவுன்சிலர்கள் தனலெட்சுமி, கண்ணன், மாலதி, சந்திரா, முருகன், முகையதீன் கனி, சிட்டி திவான் மைதீன், சங்கரநாராயணன், பாத்திமா பீவி, ராமகிருஷ்ணன், மாரி, செய்யதலி பாத்திமா, திமுக நிர்வாகிகள் மூவன்னா மசூது, முருகானந்தம், ஹக்கீம், ஜாஹிர் உசேன், அரசு ஒப்பந்தாரர்கள் மாலிக், உச்சி கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதே போல் கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமை வகித்தார். துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் முத்துப்பாண்டி, பிடிஓ முருகன் முன்னிலை வகித்தனர். இதில் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மகளிர் திட்டம் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, ஒன்றிய கவுன்சிலர்கள் கீதா, சிங்கிலிபட்டி மணிகண்டன், சண்முகையா, பகவதியப்பன், சித்ரா, ரோஜா, மாரியம்மாள், மாரிச் செல்வி, சத்யகலா, ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், முருகானந்தன், சிட்டி திவான் மைதீன், நல்லையா, திரிகூடபுரம் பஞ். துணைத்தலைவர் செய்யது மீரான், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கேடிசி நகர்: மானூர் ஒன்றியம், கங்கைகொண்டான் ஊராட்சி அலுவலகத்தில் பஞ். தலைவர் கவிதா பிரபாகரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மானூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அருள்மணி, தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளுடன், புத்தாடைகள் வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ மற்றும் புகையில்லா பொங்கல் விழாவுக்கு தலைவர் ராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாணிக்கராஜ், துணைத்தலைவர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் மாரியப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாதன் முன்னிலை வகித்தனர்.

இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் ராதா விநாயகப்பெருமாள், கோடிஸ்வரன், மாலதி முருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், கனகபொன்சேகா முருகன், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, ஜேஸ்மின் யோவான், விஜி ராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவ அன்பு, முத்துசெல்வி ஜெகதீசன், வெண்ணிலா தங்கச்சாமி, சாமுவேல் துரைராஜ், பொன்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பணகுடி: வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா தலைவர் ராஜா ஞான திரவியம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி மங்கையர்கரசி, சங்கர் ராம், ஒன்றிய பொறியாளர்கள் கணபதி ராமன், ரமேஷ் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் சீனிவாசன், ரத்தின பாப்பு, பாப்பு, மனோகர், ஜெயக்குமார், சேவுக்கணி, கசாலி ராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரைகானா ஜாவித் , பொன்குமார், டெல்சி ஒபிலியா, தாய்செல்வி, கொசிஜின், ஜெயா, மகாலெட்சுமி, மல்லிகாஅருள் , அனிதா, அஜந்தா ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவன்குளம் பாஸ்கர், கண்ணநல்லூர் மகாராஜன் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள்,அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புளியங்குடி: புளியங்குடி நகர திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகரச் செயலாளர் அந்தோனிசாமி தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன், முன்னிலை வகித்தனர். வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் பிச்சையா வரவேற்றார். விழாவில் தொகுதி பொறுப்பாளர் நல்ல சேதுபதி, தெற்கு ஒன்றியச் செயலாளர் பூசை பாண்டியன், மாவட்டப் பிரதிநிதிகள் சுரேஷ், பெருமாள் மாரிசெல்வம், நகர துணைச்செயலாளர்கள் கருப்பசாமி, காந்திமதியம்மாள், நகர பொருளாளர் காஜா மைதீன், கவுன்சிலர்கள் பிவி பாலசுப்ரமணியன், வள்ளி ராஜேஸ்வரி, பொன்னுதுரைச்சி, ரெஜிகலா, சித்ரா, கவிதா, தங்கம், மகளிர் அணி விஜயலட்சுமி, நிர்வாகிகள் அருணாசலம், மாரிகனி, மாரிசெல்வம் மைதீன், ஆனந்தராஜ், பீர் ஒலி முருகேசன், ராஜா, சதீஷ், மீனாட்சி சுந்தரம், அய்யனார், ஜகதீஷ், அண்ணாமலை, சக்தி அய்யப்பன், முருகேசன், சேக் மைதீன், மணிமாறன், நீலமேகம், பாபர் மஜீத் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

The post உள்ளாட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Nellie ,Samatthu Pongal festival ,Nellai ,Tenkasi ,VK.Puram ,Municipal Chairman ,Selva Suresh Perumal ,Vikepuram Municipality ,Municipal Commissioner ,Maheswaran ,of equality in ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...