×
Saravana Stores

சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்


திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை நடக்கும் மகரவிளக்கு பூஜையில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்க திருவாபரணம் நேற்று மதியம் 1 மணியளவில் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்பட்டது. நாளை மாலை 6.30 மணியளவில் இந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். இந்த நேரத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும்.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் ேநற்று சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவர் கூறுகையில்,’ சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஒரு ஐஜி மற்றும் 4 எஸ்பிக்கள் தலைமையில் 3750 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.

The post சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Makarajyothi ,Sabarimala ,Thiruvananthapuram ,Makaravilakku Puja ,Thiruvaparanam ,Ayyappan ,Makaravilakku Pooja ,Pandalam Valiyakoikkal ,Makarajyothi darshanam ,
× RELATED சபரிமலை செல்லும் பக்தர்கள்...