×

கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களை நிர்வகிக்க புது டிஆர்ஓ

சென்னை: கிளாம்பாக்கத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிட்டு டிச. 30ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பேருந்து முனையத்தை பயணிகள் முழு அளவில் பயன்படுத்தும் வகையில் தேவையான கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள், மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கடந்த 9ம்தேதி தலைமை செயலார் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமை செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பேருந்து முனையத்தை ‘பிளாஸ்டிக் இல்லா முனையமாக’ செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் புதிய பணியிடத்தை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை நில நிர்வாக ஆணையரக இணை ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரான ஜெ.பார்த்தீபன் இட மாறுதல் செய்யப்பட்டு கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

The post கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களை நிர்வகிக்க புது டிஆர்ஓ appeared first on Dinakaran.

Tags : New TRO ,Klambakkam ,Kudambakkam ,CHENNAI ,India ,Klambach ,Artist ,Centenary ,Bus Terminal ,Chief Minister ,M.K.Stalin ,Kuthumbakkam ,Dinakaran ,
× RELATED சென்டர் மீடியனில் பைக் மோதி புரோக்கர் பலி