- மோடி
- ரேம்
- சசிதரூர்
- Bandalur
- தேசிய இளைஞர் தினம்
- நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- நீலகிரி
- திருவனந்தபுரம் காங்கிரஸ்
- சசி தரூர்
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கலந்து கொண்டு பேசினார். மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் இந்து மதத்தை நம்புபவர்கள் பலரும் உள்ளனர். நானும் இந்து மதத்தை நம்புவதோடு கோயிலுக்கு சென்று வழிபடுகிறேன். நான் கோயிலுக்கு செல்வது, வழிபடவே தவிர அரசியல் செய்வதற்கு கிடையாது.
ஆனால், ராமர் கோயில் திறப்பு அரசியல் உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுகிறது. பணிகள் முழுவதும் முடிவடையாத நிலையில் தேர்தலை குறி வைத்து ராமர் கோயிலை அவசரமாக மோடி திறக்கிறார். ராமர் கோயிலுக்கு செல்வதற்கு எண்ணம் உள்ளது. ஆனால், தேர்தல் மற்றும் கோயிலின் முழு பணிகளும் முடிந்த பிறகு செல்வேன். அதேபோல், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் செல்வேன். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவது குறித்து அவரே முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
The post தேர்தலை குறிவைத்து ராமர் கோயிலை மோடி திறக்கிறார்: எம்பி சசிதரூர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.