×

1 கோடி பெண்களுக்கு டிரோன்கள் வழங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்


வேலூர்: வருமானத்தை அதிகரிப்பதற்காக, 1 கோடி பெண்களுக்கு ட்ரோன் வழங்கப்படும் என்று ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார். வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சாலைப் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு பேசுகையில், ‘வேளாண் பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் இயந்திரம், முதற்கட்டமாக நாட்டில் உள்ள ஒரு கோடி பெண்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

இதற்குக் காரணம், பெண்கள் தங்களுடைய அறிவுத்திறனை பயன்படுத்தி வருமானத்தை பல மடங்காக அதிகரிக்க, இயந்திரங்களை நல்ல முறையில் கையாளுவார்கள். எனவேதான் பெண்கள் பெயரில் இந்த ட்ரோன் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது,’என்றார்.

The post 1 கோடி பெண்களுக்கு டிரோன்கள் வழங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Vellore ,Union Deputy Minister ,V. K. Singh ,India ,Perumugai ,Vellore district ,Dinakaran ,
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...