×

விமான நிலையங்களை தனியாருக்கு கொடுப்பது தவறில்லை: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி


நெல்லை: தனியாருக்கு விமான நிலையங்களை கொடுப்பது தவறில்லை என்றும் அரசு தொழிலில் ஈடுபட்டால் லாபம் கிடைக்காது என்றும் நெல்லையில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். பாளையங்கோட்டையில் உள்ள வஉசி உள்விளையாட்டரங்கில் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு மாநில ஜூனியர் இறகுப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியினை நெல்லை பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இறகுப்பந்து விளையாடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக 4 வழிச்சாலை உள்பட போக்குவரத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளார்.

இதனால் பல தொழில்கள் மேம்பட்டுள்ளன. நாடு முழுவதும் 130 விமான நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அதனால் அந்த பகுதிகள் வளர்ச்சியடைந்து, அங்குள்ள நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. தனியாருக்கு விமான நிலையங்களை கொடுப்பது தவறில்லை. அரசாங்கம் தொழில் செய்யக்கூடாது. அரசாங்கம் தொழில் செய்தால் அதில் லாபம் கிடைக்காது. அரசாங்கம் எந்த தொழில் செய்தாலும் நஷ்டத்தில்தான் முடியும். ெதாடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை வைத்துக்கொண்டு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் கலந்து கொள்ளவில்லை.

பிரதமர் மோடி நாட்டின் பிரதமர் என்ற முறையில் அதில் கலந்து கொள்கிறார். அதில் தவறு ஏதுமில்லை. ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்யக்கூடாது என எதிர்ப்பு கிளம்புகிறது. ஆகம விதிகளை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது. தமிழகத்தில் ஆகம விதிகள் ஒரு மாதிரியும், கேரளாவில் வேறு மாதிரியும், வடமாநிலங்களில் மற்றொரு மாதிரியும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post விமான நிலையங்களை தனியாருக்கு கொடுப்பது தவறில்லை: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,MLA ,Nellai ,BJP ,Tamil Nadu State Under-19 Junior Volleyball Tournament ,Vausi Indoor Stadium ,Palayangottai ,Dinakaran ,
× RELATED ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில்...