×

ராமர் கோயில் குடமுழுக்கை காங்கிரஸ் புறக்கணிப்பு; யாரையும் புண்படுத்தும் வகையில் எடுத்த முடிவல்ல..!தேசிய தலைவர் கார்கே விளக்கம்

புதுடெல்லி: ராமர் கோயில் குடமுழுக்கை காங்கிரஸ் புறக்கணித்தது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த முடிவானது யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று தேசிய தலைவர் கார்கே விளக்கம் அளித்தார்.

அயோத்தியில் வரும் 22ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த விழாவில் காங்கிரஸ் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டது. இந்த விழாவை பாஜக, ஆர்எஸ்எஸ் விழாவாக முன்னிறுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பால், அக்கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைவர்கள் இடையே முரண்பட்ட கருத்துகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள முடிவு, யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது அல்ல. எந்த மதத்தையும் நாங்கள் காயப்படுத்தவில்லை. அயோத்திக்கு சென்று விழாவில் பங்கேற்க யாராவது விரும்பினால், அவர்கள் அங்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். இதனை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களை பொறுத்தவரை, பாஜகவால் முன்னிறுத்தப்படும் நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டோம்.

காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு குறித்து தொடர்ந்து குறிவைத்து பேசுகின்றனர். இது நியாயமற்றது. எங்களின் முடிவானது எந்தவொரு தனி நபரின் அல்லது மதத்தின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. மக்களையும், நாட்டையும் பாதிக்கும் நேரடி பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்தவில்லை’ என்று குற்றம்சாட்டினார்.

The post ராமர் கோயில் குடமுழுக்கை காங்கிரஸ் புறக்கணிப்பு; யாரையும் புண்படுத்தும் வகையில் எடுத்த முடிவல்ல..!தேசிய தலைவர் கார்கே விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Ramar Temple ,National ,President ,Garke ,NEW DELHI ,KARKE ,RAMAR ,TEMPLE ,Ayothi ,National President ,Dinakaran ,
× RELATED ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை...