×

புதுக்கோட்டை அருகே கால்வாயை மூடிவிட்டு சாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கால்வாயை மூடிவிட்டு சாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புனல்குளம், ஊத்துக்குளம் கால்வாயை மூடிவிட்டு சாலை அமைக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டை குருங்குளம் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

The post புதுக்கோட்டை அருகே கால்வாயை மூடிவிட்டு சாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt branch ,Pudukottai ,Madurai ,High Court ,Punalkulam ,Oothikulam ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர்...