×

எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையே காரணம் :மாசு கட்டுப்பாடு வாரியம்

சென்னை : எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையே காரணம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் களை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விசாரித்து வருகிறது. இந்த நிலையில். எண்ணெய் படலம் குறித்த ஆய்வு அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், “எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையே காரணம். சிபிசிஎல் ஆலையில் இருந்து ஏற்பட்ட கசிவே எண்ணெய் படலம் உருவாகக் காரணம். மழைநீருடன் ஆலையின் எண்ணெய் கலந்ததால் கடலில் எண்ணெய் படலம் ஏற்பட்டது. தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் சிபிசிஎல் ஆலையில் இருந்து கசிந்த எண்ணெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிச.9-ம் தேதி வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் பொதுமக்கள், மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்.

The post எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையே காரணம் :மாசு கட்டுப்பாடு வாரியம் appeared first on Dinakaran.

Tags : CPCL ,Pollution Control Board ,Chennai ,Tulur seabed ,Chennai Tolur Sea ,Kosastalle River ,Tilur ,Dinakaran ,
× RELATED நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின்...