×

விதிமுறைகளை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி உத்தரவு

சென்னை: ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடன்கள் மற்றும் முன்பணம், சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டி உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக தனலட்சுமி வங்கி, பஞ்சாப் வங்கி. சிந்த் வங்கிக்கு ரூ.2.49 கோடி அபராதம் வித்தித்து உத்தரவிட்டுள்ளது. தனலட்சுமி வங்கிக்கு ரூ.1.20 கோடியும் பஞ்சாப் – சிந்து வங்கிக்கு ரூ.1 கோடியும் அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் வாடிக்கையாளா்கள் சேவைகளை முறையாக பின்பற்றாததால் இஎஸ்ஏஎஃப் சிறு நிதி வங்கிக்கு ரூ.29.55 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக மட்டுமே மேற்கூறப்பட்டுள்ள வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவை வாடிக்கையாளா்களுடன் ஈடுபட்டுள்ள பணப் பரிவா்த்தனைகளை பாதிக்கும் நோக்கில் விதிக்கப்படவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

The post விதிமுறைகளை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : RBI ,CHENNAI ,Thanalakshmi Bank ,Punjab Bank ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!